இராமநாதபுரம் ஜூலை 6.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் தகுதியான அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டும்/நந்தர குடிநீர் வழங்கக்கோரியும் ஏர்வாடியில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கக் கோதுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏர்வாடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் டி. நம்புராஜன் தலைமையில் வலசை கிளை செயலாளர் எம்.பி.முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது இதில் பி.கற்பகம், மாலை குழு, மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு முத்துராமு. தாலுகா குழு பச்சமால் உள்பட பொதுமக்கள் திறனாக கலந்துகொண்டனர் சமரசம். கீழக்கரை தாசில்தார் ஏ. ஜமால் முஹம்மது, கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளீதரன், ஜெய ஆனந்த், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஏர்வாஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் ஆகியேரர் கலந்துகொண்டு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தினார்கள்.