கன்னியாகுமரி ஜுன் 26
குமரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் டாக்டர் ஹில்மன் புரூஸ் எட்வின் தலைமையில் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம்
தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் தனராஜ், செயலாளர் பகவதி சுப்பு மற்றும் பொருளாளர் பிரபா ஆகியோர் அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ மற்றும் அழகப்பபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் இராதாகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
புதுக்குளம் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தில் மொத்தம் 384 வீடுகள் உள்ளது. அதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். அழகப்பபுரம் நவமணி சாலையிலிருந்து புதுக்குளம் குடியிருப்புவரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் வாகனங்களில் வருவதற்கும், இரவு நேரங்களில் நடந்து வருவதற்கும் சிரமமாக உள்ளது. எனவே அந்த சாலையை செப்பனிட்டு தரவேண்டும்.
மேலும் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கும், பெண்கள் வேலைக்கும் சென்றுவிட்டு மாலை நேரம் வீட்டுக்கு வரும்போது நாங்கள் வசிக்கும் நவமணி சாலையிலிருந்து புதுக்குளம் அடுக்குமாடி குடியிருப்பு வரை உள்ள சாலையானது மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஐந்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அந்த வழியாக வருவதற்கு அச்சமாக உள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
ஆகவே நவமணி சாலையில் இருந்து புதுக்குளம் குடியிருப்புவரை மின் விளக்கு அமைத்தும், சாலையை செப்பனிட்டு தரும்படியும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



