அரியலூர், ஜூன்:27
தமிழகம் முழுவதும் டாஸ்மார்க், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை இந்த திமுக அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
இந்த அரசின் துணையோடு தான் கள்ளச்சாராயம் விற்பனையும் கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது.
இதை உடனடியாக ஆட்சியர் தடுக்க வேண்டும்.
மதுவிலக்கு துறை அமைச்சர் எஸ் முத்துசாமி சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராய வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு உடனடியாக மாற்ற பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சிினரால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
என தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில், நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா, மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் அஜீத் , நகர பொருளாளர் ராமேஷ் , இரண்டாவது வார்டு செயலாளர் மருதை உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்து கேட்டுகொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்