திருப்பத்தூர்:ஜூன்:23,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி கிராமத்தில் மின்சார கம்பிகள் தரையை தொடும் அளவில் உள்ளன.
வேல்முருகன் வட்டம் பகுதிக்கு செல்லும் மின்சார கம்பிகளால் அந்த வழியே செல்லும் பொதுமக்களுக்கும் குறிப்பாக நிலத்தில் விவசாயிகள் டிராக்டர் மூலம் ஏர் ஓட்டுவதற்கு முடியாமல் புலம்புகின்றனர். இது சம்மந்தமாக பொதுமக்கள் பத்திரிக்கௌயாளருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தகவல் தெரிவித்தும் பல மாத கணக்கில் சரி செய்யாமல் உள்ளனர். மின்சாரத் துறையின் அலட்சிய போக்கால் அந்த பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் எலவம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட கொரட்டி மின்சாரத் துறை ஊழியர்கள் மழைக் காலம் என்பதால் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.