பழநி, அக், 27.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை நவம்பர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தரமான பொருட்களைக் கொண்டு பிரசாதங்கள் தயாரித்து விற்பனை செய்வதை கருத்தில் கொண்டு இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது ரூ.15-க்கு விற்பனை செய்யப்படும் லட்டு, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை ஆகியவற்றின் விலை தலா ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முறுக்கு ரூ.25-க்கும், தேன் தினை மாவு ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய விலை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.



