மதுரை, செப்.04.
மதுரை கரும்பாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 58-ம் ஆண்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக காப்புக்கட்டி விரதம் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொறுப்பாளர்கள் சேர்வாரன், ராஜீ, காளியப்பன் உள்ளிட்டோர் மற்றும் விசிகா வடக்கு மாவட்ட வட்டச் செயலாளர் ராஜகுரு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகிருஷ்ணன், துணைச் செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



