சென்னை, அக்.23.
புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்து இரண்டு சிறுமிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த அகல்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த திவ்யா ஆகிய இருவரும் கடந்த 21-ஆம் தேதி காப்பகக் கட்டடத்தின் மாடியில் இருந்து மரத்தின் வழியாகக் கீழே இறங்கி தப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுமிகள் தப்பியோடியதற்கான காரணம் மற்றும் அவர்கள் இருக்கும் இடம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.



