ஈரோடு, அக் : 14
தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) மற்றும் நீர்வளத்துறை (WRD) ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கத்தின் கோவை மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் மண்டலப் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் C. தில்லை ராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத் தலைவர் P. உதயகுமார் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவர் T. செல்வம் சிறப்புரையாற்றினார்.
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.கூட்டத்தில் ஒப்பந்தக்காரர்களின் கோரிக்கைகள், தொழில்துறை மேம்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.



