நாகர்கோவில், அக் : 14
கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூர்ணிமடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
இம்மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர், பிறந்த தேதி, முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்தல், கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் புதுப்பித்தல் போன்ற சேவைகளைப் பெறலாம்.
அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர, வாரத்தின் ஏழு நாட்களிலும் இம்மையம் செயல்படும். பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ஆதார் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.



