ஈரோடு, அக் : 13
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேருந்து நிலையத்தில், திருப்பரங்குன்றம் கோவில் தீபத் தூணில் நீதிமன்றத் தீர்ப்பின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் அசோக் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



