தருமபுரி, செப்.12:
தருமபுரியில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு திட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திட்டச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மேலும், மின்வெட்டுக்கு பணியாளர்கள் மீதும், மீட்டர் குளறுபடிகளுக்கு கணக்கீட்டாளர்கள் மீதும் பழி சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
பேரவை கவுன்சில் தலைவர் அன்புமணி, செயலாளர் சண்முகராஜா, கூட்டுறவு பணியாளர் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோட்டச் செயலாளர்கள் தருமபுரி ரகுமாணிக்கம், அரூர் செங்கதிர், மத்திய அலுவலக செயலாளர் மகேந்திரன், திட்ட அலுவலர் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலக்கோடு கோட்டச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.



