தருமபுரி, செப். 11-
தருமபுரி அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் டாக்டர் கோ.பிரபாகரனுக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சீன் அருள்சாமி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஜி.கே.செல்வராஜ், கோவிந்தன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் டாக்டர் பிரபாகரன், கடந்த 2019-ஆம் ஆண்டு இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 7 ஆண்டுகளாக காட்சி வழித் தொடர்புத் துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு, 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஎச்.டி. பட்டம் பெற வழிகாட்டியாக இருந்துள்ளார்.



