நாகர்கோவிலில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
நாகர்கோவில், செப். 11-
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மணக்குடி கடலோர பகுதியில் அனுமதியின்றி தனியார் சுற்றுலா படகு சவாரி நடத்துவதை தடுக்க வேண்டும், மீனவர்களுக்கு குடும்ப அட்டை மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மீனவ பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், மணக்குடியில் அனுமதியின்றி நடைபெறும் சுற்றுலா படகு சவாரியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், வாணியக்குடி துறைமுகப் பணிகள் ஆய்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் தொடரப்படும் என்றும், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கடைகளுக்கான வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும் என்றும், நாட்டுப்படகுகளை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சகாய அபியூத் ராஜாவின் மனைவியிடம் அவரது இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.



