By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
கனஂனியாகுமரி

சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்

Last updated: June 2, 2025 8:55 pm
June 2, 2025
33 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 2

குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் யாசகம் பெற்றும், ஊக்கு (சேப்டி பின்) விற்பனை செய்தும்
சுற்றித் திரியும் குழந்தைகள். கையில் கிடைக்கும் சொற்ப பைசாவை வைத்து அருகில் உள்ள டீக்கடையில் டீ வாங்கி நடைபாதையில் அமர்ந்து கொண்டு பரிதாமாக தேநீர் அருந்தும் இரண்டு சிறுவர்கள் யார் ? இவர்களின் பெற்றோர் யார் ? இவர்களை இப்படி நடுரோட்டில் சிறுவயதில் வியாபாரம் , மற்றும் யாசகம் எடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் சமூக விரோத கும்பல் யார்?
மாவட்ட சமூக நல அதிகாரிகள் கண்களில் மற்றும் அரசின் நிதி உதவியுடன் இயங்கி வரும் பல தொண்டு நிறுவனங்களின் கண்களில் இப்படி சுற்றித் திரியும் சிறுவர்கள் அகப்படவில்லையா? ஒவ்வொரு பெற்றோரும் பள்ளி திரப்பினை முன்னிட்டு தங்கள் குழந்தைகளின் எதிர் காலம் கருதி அவர்களை படிக்க வைப்பதற்காக வேண்டி லட்ச, லட்சமாக பணங்களை செலவு செய்து பள்ளி சேர்க்கைக்கு ஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கி படாதபாடுபட்டு பின் கடை, கடையாய் அலைந்து திரிந்து நோட், புக் , யுனிஃப்பார்ம் என்று பார்த்து பார்த்து வாங்கி கொடுத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி மன நிறைவு அடையும் வேளையில் இது போன்ற குழந்தைகள் யாசகம் பெற்றும், சில பொருட்களை விற்பனை செய்தும் சீரழிந்து வருகின்றனர். பெற்றால் தான் பிள்ளையா? கல்வி அறிவு பெற்ற மாவட்டம் என்று
மார்தட்டிக்கொண்டு மயக்க நிலையில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் கல்வி கற்க முடியாதபடி
ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், அனாதையாக இருப்பவர்கள், தாய் தகப்பனை இழந்த பிள்ளைகள் , சாலை ஓரங்களில் சுற்றித் திரிந்து யாசகம் பெறும் சிறு குழந்தைகள் ஆகியோரை கண்டறிந்து அவர்களின் கல்லாமையை போக்கி கல்வி அறிவு எனும் ஒளியை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஏன் முன் வரவில்லை.
கல்வி அறிவை கொடுப்பதற்காக அரசால் வழங்கப்படும் நிதி செலவழிக்கப்படுகிறதா ? இல்லை கையாடல் செய்யப்படுகிறதா ?
செலவழிக்கப்படுகிறது என்றால்
சாலை ஓரங்களில் குழந்தைகள் சுற்றி திரிய மாட்டார்கள். இதுபோன்ற
குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட சமூக நல துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என யோசித்துப் பார்த்தால் சமூக நலத்துறையில் பணியாற்றுபவர்கள் சமூக நல அக்கறையுடன் வெளியில் சென்று வேலை பார்ப்பது இல்லை என தெரிய வருகிறது. தொலைபேசி அழைப்பு மூலம் வரும் புகார்களை மட்டும் பார்த்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்து மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு நிம்மதியாக இருந்து வருகின்றனர்.
இந்த சிறுவர்கள் சிறுவயதில் உண்ண உணவு இன்றி, உடுக்க உடையின்றி, கால்களில் செருப்பு கூட அணியாமல் பிஞ்சு கால்களில் மழை, வெயில் காலங்களில் சாலையில் அங்கும், இங்குமாக வாகனங்கள் வருவதை கூட கவனிக்காமல் விபத்தை உணராமல் அலைந்து திரிந்து வியாபாரம் செய்து பிழைப்பது நியாமா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் , எனவே மாவட்ட சமூக நல துறையினர் மாவட்டத்தில் இது போன்ற சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது போன்று
செயல்படாமல் அலுவலகத்திலேயே இருந்து பணி செய்து வரும் சமூக நலத்துறை ஊழியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வாரா ? எதிர்பார்ப்புகளுடன் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
புத்தனாறு கால்வாய் தூர்வாரிய கழிவுகள்
மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
குளச்சல் அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது
உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

July 6, 2024
273 Views
தருமபுரியில் தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account