தருமபுரி, செப். 3:
தருமபுரி தங்கம் மருத்துவமனை எதிரே மத்திய அரசின் நேரடி ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கி வைத்தார். வாரத்தின் 7 நாட்களும், பண்டிகை நாட்கள் உள்பட தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும்.
இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஆதார் பதிவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாளொன்றுக்கு 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



