திருவள்ளூர்: ஆக.22:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்குட்பட்ட பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் சைதாப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சார்பில், சட்டப்பூர்வ கூட்டுறவு நிதிகள் வழங்கப்பட்டன.
பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 2018-2019ஆம் ஆண்டிற்கான நிதியும், சைதாப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதியும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டது.
இதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதி ஆகியவற்றுக்கான மொத்த தொகை ரூ.4,84,507க்கான காசோலை வழங்கப்பட்டது. பொன்னேரி மற்றும் சைதாப்பேட்டை கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சங்கச் செயலர் யுவராஜ், இந்தக் காசோலையை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீயிடம் வழங்கினார்.
கூட்டுறவு துறையின் வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படும் வகையில் இந்த சட்டப்பூர்வ நிதிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் உடனிருந்தார்.



