By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.252 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.252 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.252 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Last updated: July 29, 2026 7:51 pm
July 29, 2026
8 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 29 –

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பெரியஏரியில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணி, வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாணவர் விடுதி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம். நிம்மியம்பட்டு ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை, தார்சாலைப் அமைக்கும் பணி, வெள்ளக்குட்டை ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை என மொத்தம் ரூ.2 கோடியே 52 இலட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக, நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்படும். 116.5 ஹெக்டர் பரப்பளவு மற்றும் 41 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட திருப்பத்தூர் பெரியஏரியில், குப்பை மற்றும் கழிவு பொருட்களை ஏரிக்கரையின் மீது கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வாணியம்பாடி, ஆலங்காயம் ரோடு வேப்பமர சாலை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை விவரங்களையும் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்று செல்லும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் லிப்ட் மற்றும் எஸ்க லெட்டர் மெக்கானிக் பிரிவு (Lift and Escalator Mechanic), (Mechanic-Motor Vehicle). குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் (Refrigeration and Air-Conditioning Technician), (Fashion Design & Technology), தோல் பொருள் உற்பத்தியாளர் பிரிவு (Leather Goods Maker) ஆகிய தொழிற் பயிற்சி பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக தமிழ்நாடு அரசினால் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் 4.0 பணிமனையில் பயிற்றுவிக்கப்படும் அதிநவீன தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்சார வாகனம் (Mechanic Electric Vehicle). உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் (Manufacturing Process Control & Automation), எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில் நுட்பவியலாளர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) ஆகிய தொழிற்பிரிவுகளை பார்வையிட்டார். மேலும் இப்பணிமனையில் ரோபோடிக்ஸ் (Robotics) பயன்படுத்தி வெல்டிங் (Welding) செய்யும் செயல்முறையையும் பார்வையிட்டு, அரசு பயிற்சியாளர் நலனுக்காக அதிநவீன தொழில்நுட்ப பணிமனையையும் அதிநவீன இயந்திரங்களையும் வழங்கியுள்ளதால் அவற்றை முழுமையாக பயன்படுத்தி பயிற்சியாளர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்குமாறு பயிற்றுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் தங்கும் விடுதியை பார்வையிட்டார். வாணியம்பாடி மகளிர் கல்லூரி மாணவியர் விடுதி பழுதுபட்டிருப்பதால் அவ்விடுதியை இந்நிலையில்அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ் (VB-G RAM – G), அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினை ஆய்வு மேற்கொண்டார். இப்பண்ணையில் கொய்யா, புளியமரம், கொடுக்காப்புளி, சீதா, நெல்லி, பாதாம் உள்ளிட்ட 14.000 செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, மரக்கன்றுகளை அதன் உயரம் மற்றும் வகைகளின் அடிப்படையில் போதுமான இடைவெளி விட்டு தனித் தனியாக பிரித்து வைக்கவும். மரக்கன்றுகளின் பெயர் மற்றும் இருப்பிலுள்ள விவரம் ஆகியவற்றினை கொண்ட பெயர் பலகையினை பொருத்தவும். முறையாக தண்ணீர் ஊற்றி செடிகள் வளர்க்கவும் மற்றும் இயற்கை உரம் இட்டு செடிகளை வளர்வதை கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2026 2027) கீழ் ரூ.153 கோடி (ரூ.153.14 இலட்சம்) மதிப்பீட்டில் மராட்டிபாளையம் முதல் துறிஞ்சிகுட்டை வரை 3.400 கிலோமீட்டர் நீளத்திற்கு தார்சாலைப் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலைப் பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து ஆய்வு செய்து. பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளக்குட்டை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ் (VB-GRAM-G), வட்டார நாற்றங்கால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து. மரக்கன்றுகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டு, தரமான நாற்றுகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இப்பண்ணையில் மகாகனி, வேங்கை, நாவல், புங்கன், வேம்பு, ரோசூட், சீதா உள்ளிட்ட 19,503 செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா (வெள்ளக்குட்டை), எழிலரசி (நிம்மியம்பட்டு), திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், பாலமுருகன், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பி.ஆர்.அம்சவேணி, உதவி பொறியாளர்கள் சக்தி (நீர்வளத்துறை), தோட்டாலம்மாள் (ஊரக வளர்ச்சித்துறை), தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் தென்னரசு, பயிற்சி அலுவலர் ஆ.லோகநாதன், பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி டான் போஸ்கோ கல்லூரியில் “ஜனனம்” போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்

November 28, 2024
63 Views
வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
மாநில அளவிலான வாலிபால் அணிக்கு தென் தாமரைக்குளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ ஆகாஷ் தேர்வு
கலைஞர் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account