திருச்சி, ஜூலை 20 –
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு அண்ணா கலைக் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உடலுக்கும் மனதிற்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடிய அரசால் தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கெட்டுப்போன கஞ்சா இலை துகள்களை விற்பனை செய்ய வைத்திருந்த திவாகர் (19), சகாயராஜ் (22), பிரேம் (25) மூன்று பேரையும் துவாக்குடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தனிப்படை காவலர்கள் கணேசன், பிரசாத் ஆகியோரால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா துகள்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது துவாக்குடி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு எச்சரிக்கை செய்து இரு நபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.



