மதுரை, ஜூலை 17 –
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாதுகாவலனாக முன் களப்பணியாளராக பணியாற்றி அனைவரின் கோரிக்கைகளை ஐந்துக்கும் மேற்பட்ட முதலமைச்சர்களுக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுத்து அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின், அனைத்து நிலை பணியாளர்களின் கவனத்தையும் தன்பால் கவர்ந்து, வாழ்ந்த செம்மல் நம்மிடையே இருந்து மறைந்தாலும் கோரிக்கைகள் பெற்றுள்ள பலன்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் உத்தம தலைவன் தானைத் தலைவர் அமரர் சிவ. இளங்கோ அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மதுரை மாவட்ட மையம் சார்பாக மாவட்டத் தலைவர் இளங்கோ அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் மகேந்திர குமார், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநில பொருளாளர் திலகர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கூட்டமைப்பு தலைவர்களும், மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட, வட்டக்கிளை இணைப்புச் சங்க நிர்வாகிகளும் ஓய்வு பெற்ற தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.



