திருச்சி, ஜூலை 17 –
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு மலை ஜீவானந்தம் தெரு பகுதியைச் சேர்ந்த மலையன் மகன் லட்சுமணன் என்பவர் கடந்த வருடம் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ரவி போஸ்கோ, ரவுடி கருவா ராமச்சந்திரன், ரவுடி கோழிலோகேஷ் ஆகியோருடன் போண்டா சந்தோஷ் என்ற ஐந்து பேரும் முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டு கையில் இரும்பு ஆயுதங்கள் உடன் பாதசாரிகளை மிரட்டி அவர்களிடம் உள்ள பணம் நகையாகியவற்றை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
ரவி போஸ்கோ, தருவ ராமச்சந்திரன், கோழி லோகேஷ் மூன்று ரவுடிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போண்டா சந்தோஷ், வெங்காயம் லட்சுமணன் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் லட்சுமணன் என்ற வெங்காயம் லட்சுமணன் துவாக்குடி காவல் நிலைய உதவியாளர் நாகராஜ் அவர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அடைப்பு பெறப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள போண்டா சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.



