By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? திருச்சியில் துரை வைகோ பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? திருச்சியில் துரை வைகோ பேட்டி
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? திருச்சியில் துரை வைகோ பேட்டி

Last updated: July 14, 2026 6:31 pm
July 14, 2026
10 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 14 –

விஜய் அரசு எம்எல்ஏக்களை களவாட வேண்டிய அவசியம் இல்லை எனவும், திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார், என திருச்சியில் துரை வைகோ எம்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்த விபரம் வருமாறு:

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: வியட்நாம் பகுதியில் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக திருச்சியை சேர்ந்த பாலாஜி, அழகுராஜா, ஷேக் அப்துல்லா ஆகிய 3 பேரும் உயிரிழந்துள்ளார்கள். தகவல் கிடைத்தவுடன் வெளியுறவு துறைக்கு தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடலை விரைவாக மீட்டு தர வேண்டும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தெரிவித்தேன். உடனே வெளியுறவுத்துறை அதிகாரிகள் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்களுக்குள் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். இந்த விபத்து அஜாக்கிரதை காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் முதலுதவி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு முன்பாக அங்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா? என கவனிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடு இல்லையென்றால் அங்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். திருச்சியை சேர்ந்த பாலாஜி, அழகுராஜா, ஷேக் அப்துல்லா ஆகியோர்களின் இல்லங்களுக்கு சென்று நான் ஆறுதல் கூற உள்ளேன். மேலும் உடல்களை கால தாமதம் ஏற்படாமல் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தவெக விஜய் அரசுக்கு களவாட வேண்டும் என்று அவசியம் கிடையாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் சுமார் 20 கோடி, குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார்கள், ஆனால் அவர்களால் வாக்கு பெற முடியவில்லை, இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அது மட்டுமல்லாமல், யாருமே நம்ப முடியாத ஒரு சூழ்நிலையை நாம் பார்த்து உள்ளோம். அதிமுக- பாஜக – திமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் என யாரும் ஏற்று கொள்ளவில்லை.

திமுகவுடன் ரகசிய கூட்டணிக்கு எடப்பாடி. பழனிச்சாமி எடுத்த முடிவுக்கு அதிமுகவின் உண்மையான நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதன் அடிப்படையில் தான் பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துள்ளார்கள். மேலும் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என சாரசாரையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருப்பவர்கள் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவெகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு சேர்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளார்கள். சாமானிய மக்கள், ஆட்டோ ஓட்டுநர், தண்ணீர் கேன் போடுபவர்கள் என சாமானிய மக்கள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளார்கள். மதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு விலை போய் விட்டார்கள். குதிரை பேர செயல்களில் திமுக தான் ஈடுபட்டு வருகிறது. தவெக அல்ல.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிலிருந்து 150 ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கட்சியை விட்டு விலகியுள்ளார்கள். இதை குறித்து செய்திகள் வெளிவரவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார். திமுகவை மதிக்கிறோம் அண்ணா கண்ட இயக்கம், கலைஞர் அவர்களை மதிக்கிறோம். ஆனால் அக்கட்சியின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை பல தோழர்கள் இழந்து விட்டார்கள்.

திமுக – அதிமுக தலைமை மீது ஒரு நம்பிக்கை இல்லாதது தான் பலர் மாற்று கட்சிக்கு செல்ல கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கனிம வளங்களில் காப்பர் பிளாண்ட் என்பது மிக முக்கியமானது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஒரு விஷயம் ஆகும். ஆனால் தூத்துக்குடியில் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மேலும் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒன்று காப்பர் பிளான்ட் , ஆகையால் தான் எதிர்க்கிறோம், மற்றபடி வேற எதற்கும் எதிர்க்கவில்லை சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திமுக- தவெக ஒரு அணியில் இருக்க வேண்டுமென திருமாவளவன் கூறியது ஏற்புடையது அல்ல. அதிமுக – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது, திமுக அதிமுக பாஜகவுடன் இருக்கிறது, அப்படிப்பட்டவர்கள் எப்படி பாஜகவை எதிர்ப்பார்கள்.

தமிழ்நாடு இந்தாண்டு ரூ.85 கோடி கடன் வாங்க போகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் கோடி கடன் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்திருந்தாரே என்ற கேள்விக்கு பதில் கூறிய துரை வைகோ, அவர் சொன்னதை என்னால் மறுக்க முடியாது. மாநிலத்திற்கு தேவையான நிதிக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கனிம வளங்களில் பல்வேறு முறைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் வரக்கூடிய நிதிகளை வைத்து சிறப்பான ஒரு சூழ்நிலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். 100-100 உண்மை, பார்ட்டி ஃபண்ட் நடந்தது, தவெக அரசு தற்போது தெளிவாக செயல்பட்டு வருகிறது.

அண்ணாமலையின் முதல் மாநாட்டை போதையில்லாத தமிழ்நாடு என்று நடத்தியுள்ளார். நல்ல விஷயங்களை பேசி உள்ளார் வரவேற்கத்தக்கது. பிற அரசியல் இயக்கங்கள் செய்யாததையும், சொல்லாததையும் அண்ணாமலை செய்திருக்கிறார். இது நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். அண்ணாமலைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் இல்லாத ஒரு அரசியலை கொண்டு வந்திருக்கிறார். சாதி, மதம், பணம் இல்லாத ஒரு அரசியலை தவெக விஜய் கொண்டு வந்துள்ளார். இந்த மாற்றம் பாதுகாக்கப்பட வேண்டும், இந்த மாற்றம் தொடர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

விஜய் – அண்ணாமலை இனைந்து செயல்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் கூறிய துரை வைகோ, நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் சேருவது தவறில்லை, மேலும் இதுக்குறித்து அண்ணாமலையும் – விஜய் அவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் வெற்றி பெற்றதற்கு திமுக தான் காரணம் என்று சொல்வது பொய். நான் வெற்றி பெற்றதற்கு திமுகவின் பங்கு அதிகமாக உள்ளது. அதே போன்று கூட்டணி கட்சியின் பங்கும் உள்ளது.

திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா, அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார். தில் இருக்க , தைரியம் இருந்தால் திமுக தலைமை இன்று அறிவிக்கட்டும், நான் ராஜினாமா செய்ய தயார், மீண்டும் தேர்தலை சந்தித்தால் 40ம் போய்விடும் என திமுக தலைமைக்கு ஆவேசமாக சவால் விட்டார் துரை வைகோ எம்.பி. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட மதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

புலியூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

July 14, 2025
46 Views
மஹா யாகத்திற்கான ஆலோசனை கூட்டம்
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
த.வெ.க சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account