நாகர்கோவில், டிச. 13 –
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் நசீர் அகமது மனைவி நசீகா பேகம் (26). இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமண நடந்தது. இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் நசீகா பேகம் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு நசீகா பேகம் சென்று தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் படுக்கையறைக்கு சென்ற நசீகா பேகம் இன்று காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்து வரவில்லை. இதனால் தாயார் சென்று பார்த்த போது நசீக பேகம் படுக்க அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனடியாக கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நசீகா பேகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 ஆண்டுகளுக்குள் நசீகா பேகம் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் இது குறித்து நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி மற்றும் மாநகர டவுன் டிஎஸ்பி (பொறுப்பு) சிவசங்கர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


