கிருஷ்ணகிரி, ஜூலை 6 –
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இலவச மின்சாரம் கேட்டு உயிர் நீந்த விவசாயிகளின் நினைவாக உழவர் தின பேரணி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இரமகவுண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்தி சிலை அருகில் இருந்து துவங்கிய இந்தப் பேரணியை விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பீ.ஆர்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோலாட்டத்துடன் புறப்பட்டு நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக சென்ற இப்பேரணியானது கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உழவர் தின பொதுக்கூட்டத்தில் வருகை தந்தவர்களை வரவேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் அனுமந்தராசு வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்ரமணிய ரெட்டி, மா நர்சரி உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் கன்ணையன், மாவட்ட துணைத்தலைவர் வேலு மாவட்ட துணை தலைவர் வரதராஜன், தலைமாவட்ட பொருளாளர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன்,
செயலாளர் சக்திவேல், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சத்திவேல், மாவட்ட இளைஞர் அணி தணைச் செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் ஒன்றிய தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கினைப்பு குழுத் தலைவர் ஆர்.ண்டியன் தென்னிந்திய விவசாய சங்கத்தின் தலைவர் நரசிம்மம் நாயுடு, கர்நாடக மாநிலத்தின் தலைவர் குறும்பூர் சாந்தகுமார் மற்றும் மாநில தலைவர்களான ஊட்டி மஞ்சல் மோகன், நாமக்கல் மாநில தலைவர் சுப்பிரமணியன், கோவை மாநிலத்தலைவர் பாபு, சத்தியமங்கலம் மாநில செயலாளர் வேலுமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை எடுத்துக்கூறி சிறப்பு உரையாற்றினார்கள்.
மேலும் இந்த கூட்டத்தின் போது தெலுங்கானா அரசு போல் தமிழகத்திலும் ஏக்கருக்கு 10 ஆயிரம் வெவ்வெரு பேகத்திற்கும் வழங்கப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் விவசாயிகள் பயிர்கள் பயிர் கடன் 2 லட்சம் வரை தள்ளுபடி செய்கிறது. அதேபோல் உத்தரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பயிர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு 23 லட்சம் கோடி வரை தள்ளுபடி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரிசர்வ் வங்கி குறை கூறுவதை ன்னை மாற்றிக்கொணடு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன் முமுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் சார்ந்த சாகுபடிக்கு இலவச மின்சாரமாக வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை விவசாயி மட்டுமே பயன்படுத்த வேண்டும், கேரளாவில் காட்டுப் பன்றியை சுட்டு கொல்ல ரூ 5000 ஆயிரம் வழங்குவது போல் இந்தியாவில் 11 மாநிலங்கள் வழங்கப்படும் அதேபோல் தமிழகத்திலும் வழங்கப்ட வேண்டும், மத்திய அரசு நெல்லுக்கு உண்டான ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50 வழங்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்களும் எடுத்து செல்லும் விளைப் பொருள்களுக்கு தண்டம் வசூல் செய்யக்கூடாது. உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை உயரத்தி வழங்கபட வேண்டும் உள்ளிட்ட 28 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இந்த பேரணியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்



