By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Last updated: July 2, 2026 7:31 pm
July 2, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 2 –

கன்னியாகுமரி கடற்கரை சாலை நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை இன்று அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சாலையில் உள்ள காந்தி மண்டபம் தொடங்கி காமராஜர் மண்டபம், சன்செட் பாயிண்ட் வரை உள்ள நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்றி சுற்றுலா பயணிகளுக்கு நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வருவாய்துறை, காவல்துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்யப்பட்டு கடைகள் அகற்றப்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

நகராட்சி ஆணையர் பட்டுசாமி கூறும் போது: காந்தி மண்டபம் முதல் காட்சிகோபுரம் வரை அய்யன் திருவள்ளுவர் சாலையில் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சுமார் 300 நடைபாதை கடைகள் மற்றும் உருட்டு வண்டி கடைகள் இருந்தது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.கடைகளை அகற்றுவது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வழக்கப்பட்டதால் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தாமாகவே கடையை அகற்றினர். சில கடைகள் அகற்றப்படவில்லை. அந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் கடையை அகற்றினர்.

அகற்றப்பட்ட இடத்தில் கடை நடத்த எந்த அனுமதியும் கிடையாது. அகற்றபட்ட இடத்தில் மீண்டும் கடை நடத்த முயன்றால் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு
இரணியலில் விபத்து வழக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மண்டைக்காடு அருகே பைக் – கார் மோதல்; மூதாட்டி படுகாயம்

May 26, 2025
29 Views
முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
இலவச கண் சிகிச்சை முகாம்
அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account