சுசீந்திரம், ஜுன் 25 –
புத்தளம் அருகே உள்ள சிங்களேயர்புரியை சேர்ந்தவர் மணி இவரது மகன் சுபாஷ் (43). இவர் கொத்தனார் கையால் வேலை செய்து வந்தார். இன்று பள்ளம் லூர்து காலனியில் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாயார் தங்கம்பூ சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்.


