களியக்காவிளை, ஜூன் 19 –
மார்த்தாண்டம் சந்திப்பு அருகே கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இவ்வருட வருஷாபிஷேக திருவிழா கடந்த வாரம் ஜூன் 14-ம் தேதி துவங்கியது. தினமும் அஷ்டதிரவ்ய மஹா கணபதி ஹோமம், வேதபாராயணம், சிறப்பு தீபாராதனை, சுவாமி ஆலய வீதி வலம் வருதல், அன்னதானம், மாலை, பஜனை, ஸஹஸ்ரநாம அர்ச்சனை, மலர் நிவேத்திய பூஜை, திருவிக்கு பூஜை, மஹா தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
ஏழாம் திருவிழா (ஜுன் 20ம் தேதி) நாளை மாலை 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. திருவிளக்கு பூஜையினை நெட்டாங்கோடு ஶ்ரீ சாரதேஸ்வரி ஆஸ்ரமம் மாதாஜி யோகேஸ்வரி மீராபுரி நடத்துகிறார். பிந்து ஶ்ரீ பிரகாஷ் திருவிளக்கு ஏற்றி வைக்கிறார். திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் மகளிர்க்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். தொடர்ந்து மகளிர் மாநாடு, பரிசு வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


