கிருஷ்ணகிரி, ஜூன் 19 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிறந்த நாள் கானும் பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில், கிருஷ்ணகிரி டான்சி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஶ்ரீசெல்வ வினாயகார் திருக்கோவிலில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ராகுல் காந்தி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதியபேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ராகுல் காந்தி பிறந்தநாள் விழவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் வருகை தர, அவருக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கோபிநாத், ராகுல்காந்தி பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
அப்போது மாவட்ட தலைவர் எம்.சி.ரகு தலைமை வகித்தார். நகரத் தலைவர் லலித் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா, வட்டாரத் தலைவர்கள் விஜயகுமார், கல்லாவி ரவி, நஞ்சுண்டன், சித்திக், கோபாலகிருஷ்ணன், ஸ்ரீராம், சுப்பிரமணி, மாரியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் டாக்டர் தகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பாவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆகா.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரவர்மா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகுமாரவேல், மாவட்டத் துணைத் தலைவர் பி.சி.சேகர், எஸ்.சி, எஸ்.டி, பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர்கள் கலந்து கொண்டு ராகுல்காந்தியை வாழ்த்தி பேசினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அர்னால்டு ரமேஷ், கலை பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஷபிக் அஹமத், மாவட்ட மகளிர் அணி தலைவி உமா சங்கரி, எம் சி சம்பத், ஐஎன்டி சி அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், மீனவர் அணி செல்வம், சதாம் ,மடத்தனூர் ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர் முபாரக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர் அகமத் , ஓ பி சி முன்னாள் மாவட்ட தலைவர் அஜித் பாஷா, வெங்கடேசன், பிரஸ் சரவணன், ஏழுமலை, மத்தூர் பாபு, பாண்டுரங்கன், முன்னாள் வட்டார தலைவர் பன்னீர்செல்வம், கஞ்சனூர் வெங்கடேசன், சங்கர், இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், அனுமந்தன், போச்சம்பள்ளியை சேர்ந்த சிவலிங்கம், மனோசரன், கணேஷ், சக்திவேல், கருணாமூர்த்தி, கமால்கான், மொயின் முனவர், கமால்ஹான், மரிக்கம்பட்டி சக்திவேல், முஸ்தாக், சத்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி நன்றி உரையாற்றனர்.



