திருச்சி, ஜூன் 9 –
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் (18) என்பவர், சதாம் உசேன் (19) மற்றும் ஷேக் அப்துல்லா (19) ஆகியோருடன் சேர்ந்து திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள லாட்ஜில் போதை ஊசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் யாஸ்மின் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி யாஸ்மின் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த கன்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார், சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



