சென்னை, மே 27 –
கைபேசி, மடிகணிணி தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் பெறும் வகையில் 2 வருட கால பயிற்சி தரும் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சென்னை எழும்பூரில் கிளை திறப்பு விழா நடை பெற்றது. இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.பல்லவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் லட்சுமிநாராயணன், டிஜிட்டல் கிரியேட்டர் கமலி குணசேகரன், வெதர்மேன் வேல்க் அபிஷேக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தொழில் வழி காட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய கைபேசி, மடிகணிணி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்சிப்பட்டறை மற்றும் இலவச செய்முறை பயிற்சி பயிலரங்கம் மூலம் மாணவர்கள் நவீன இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு கற்றுக்கொள்ளும் அனுபவத்தை பெற்றனர்.
இதுகுறித்து கிராண்டீஸ் இன்ஸ்டியூட் நிறுவன தலைமை நிர்வாகி ஷாஹித், சென்னை கிளை மேலாளர் பரத் ஆகியோர் தெரிவித்ததாவது: கிராண்டீஸ் இன்ஸ்டியூட்டில் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே ₹70,000 முதல் ₹1,20,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோர்ஸ் முடித்த பிறகு ₹20,000 முதல் ₹50,000 வரை மாத சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளியூர் மாணவர்களுக்கு சமைக்கும் வசதிகளுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளும் செய்து தரப்படும்என்று தெரிவித்தனர்.



