தஞ்சாவூர், மே 26 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதிக்கு தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம். நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத 3,069 பேர், மின்னணு கேஒய்சி பதிவு செய்யா த 1, 196 பேர் ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி பதிவு செய்யாத 252 பேர் இத்திட்டத்தின் பலனை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும். இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவரையோ தொடர்பு கொண்டு விடுப்பட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 23 வது தவணை ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ள நிலையில் நில ஆவண விவரங்கள் புதுப்பித்தல், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின்னணு கே.ஓய்.சி பதிவு உள்ளிட்ட தகவல்களை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் விடுபட்ட தகுதியுடை ய விவசாயிகள் தொடர்ந்து பயன் பெற முடியும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தவணை தொகை பெற்று வரும் 7,553 விவசாயிகள் தனித்துவ அடையாள பதிவு எண்ணை (எப்.ஆர்) மேற்கொள்ளப்படவில் லை. நில உடமை பதிவு செய்யாத பயனாளிகளுக்கு பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட தவணை தொகை நிறுத்தப்படவாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் உடனடி யாக தங்களின் நில உடைமை களை பதிவு செய்து, திட்டத்தின் தொடர்ச்சியாக பலனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இத்திட்டத்தின் பயனாளியாக இருந்து இறந்தவர்களின் வாரிசுகள் தங்கள் பெயரில் நில ஆவணங்கள் மாற்றி இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழை கொண்டு புதிதாக பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை பெறலாம். தஞ்சாவூர் மாவட்ட விவசாயி அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்தி, பிரதம மந்திரி கவுர நிதிஉதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படும். நிதி உதவியை பெற தேவையான அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக பின்பற்ற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



