கருங்கல், ஜன. 5 –
தென் அமெரிக்காவில் சோசலிச பாதையில் ஆட்சி நடத்தும் நாடான வெனிசுலாவின் எண்ணை வளத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசிலா மீது குண்டுகளை வீசி அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து உலகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக கருங்கல் ராஜீவ் காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் கிழக்கு வட்டார கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
வட்டார செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டப் போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தொடங்கிவைத்து பேசினார். முன்னாள் வட்டார செயலாளர் சாந்தகுமார்,டிஒஎப்ஐ வட்டார செயலாளர் நந்தகுமார், சிஐடியு ஆட்டோசங்க மாவட்ட செயலாளர் சோபனராஜ், கட்டுமான சங்க வட்டார செயலாளர் றசலானந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட குழு உறுப்பினர் சகாயபாபு முடித்துவைத்து பேசினார். நிகழ்வில் டிஒய்எப்ஐ வட்டார தலைவர் ஜிபின்ஜார்ஜ், பொருளாளர் ஜிஜோ கிறிஸ்டோபர், துணைச்செயலாளர் பெனோவின் கிஷோர், நிதின், விவசாய சங்க வட்டார செயலாளர் செல்லநாடார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.



