திருச்சி, மே 19 –
திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் கொடியாலம் பகுதியில், லோடு ஏற்றிச் சென்ற கனரக லாரி ஒன்று சாலையோரம் இருந்த பயணிகள் நிழல் குடை மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, நிழல் குடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஜுயபுரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



