மார்த்தாண்டம், ஏப். 24 –
புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் நேற்று மதியம் காப்புக்காடு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி வாக்குசாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த களப்பாறை என்ற இடத்தை சேர்ந்த ரமேஷ் (44), மாடன் கண்ணுவிளை பகுதியை சேர்ந்த செந்தில் குமார் (36) ஆகியோர் வாக்காளர்களுக்கு இடையூறு செய்து பொதுத் தொல்லை செய்ததாக தெரிய வருகிறது.
உடனடியாக அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் புகாரின் பேரில் ரமேஷ், செந்தில் குமார் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


