சுசீந்திரம், மார். 26 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. தற்போது தெப்பத் திருவிழா வர உள்ள நிலையில் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்று தெப்பக்குளம் தடுப்பு சுவர் கட்டுவது குறித்து பொறியாளர்கள் சென்னையிலிருந்து வருகை புரிந்து ஆய்வு செய்து அறிக்கையினை சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பேரில் தெப்பக்குள தடுப்புச் சுவரை பழமை மாறாமல் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியினை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து தலைமை பொறியாளர் பெரியசாமி, கண்காணிப்பு பொறியாளர் சச்சுதானந்தம், திருநெல்வேலி மண்டல பொறியாளர் சிவகுமார் ஆகியோர் வருகை புரிந்து தடுப்பு சுவர் கட்டும் பணியை பார்வையிட்டு தடுப்பு சுவரின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்பு தெப்ப திருவிழா விரைவில் வருவதால் பணியினை விரைந்து முடிக்க கூறினார். அவருடன் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், செயற்பொறியாளர் ஆறுமுகம், மண்டல செயற்பொறியாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



