நாகர்கோவில், மார்ச் 23 –
செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவரின் 2 வது மகன் சஞ்சய் (19). காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை கண்ணம்புதூர் என்ற பகுதியில் அவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ஆற்றுப் பாலம் அருகே உள்ள சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி உள்ளார். இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சஞ்சய் அருகில் உள்ள வீட்டின் நிலை கதவு மீது பயங்கரமாக மோதி உடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, அவரை ஆம்பல் ஆம்புலன்சில் உள்ளவர்கள் மீட்டு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து ஆரல்வாய் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


