மார்த்தாண்டம், மார்ச். 16-
மார்த்தாண்டம் அருகே முழங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (45) மர வேலை செய்யும் தொழிலாளி. இவரது மகளை முள்ளஞ்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த சஜின் என்பவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை கடந்த 8 ம் தேதி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சஜின் மீது ஜஸ்டின் புகார் அளித்துள்ளார்.
இந்த விரோதத்தை மனதில் வைத்த சஜின் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜில் மற்றும் கண்டால் தெரியும் 2 நபர்களுடன் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று ஜஸ்டினை கத்தி, கம்பி ஆகியவற்றால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜஸ்டினை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சஜின், விஜில் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 2 பேர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


