இரணியல், மார். 10 –
இரணியல் அருகே குருந்தன் கோடு பகுதியில் காரோடு அருகே வசித்து வருபவர் பிரான்சீஸ் (71). கொத்த வேலை செய்து வந்தார். இவருக்கு வசந்தா மேரி என்ற மனைவியும் ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.
நேற்று மாலை சென்னையில் இருந்து ஊருக்கு வரும் மகளை அழைத்து செல்ல அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் காத்து இருந்தார். அப்போது சாலையில் எதிர்புறம் மகள் நிற்பது கண்டு சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் பிரான்ஸீஸ் மீது வேகமாக மோதியதில் கீழே விழுந்ததில் பின் தலையில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதனை கண்ட உறவினர்கள் நண்பர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவர் மகன் அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் அகஸ்தீஸ்வரம் தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியில் சேர்ந்த பாலன்(45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



