மார்த்தாண்டம், மார். 6 –
குழித்துறை அஞ்சல் துறையின் உப கோட்டம் மற்றும் குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி, குழித்துறை தேசிய சேவை திட்டம் – பிரிவு 98 மற்றும் 99 இணைந்து தேசிய பாடல் வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர்களுக்கான டிஜிட்டல் அறிவு” சிறப்பு முகாமுடன் இணைந்து கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், குழித்துறை அஞ்சல் உப கோட்ட ஆய்வாளர் கண்மணி, பேராசிரியர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஸ்ரீஜா மற்றும் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
150 ஆம் ஆண்டு தேசிய சங்கீதக் கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி மாணவிகள் “வந்தே மாதரம்” பாடலைப் பாடினார்கள். தற்போதைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சி, அதன் நன்மை-தீமைகள் மற்றும் அதை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து டிஜிட்டல் அறிவு தொடர்பான விழிப்புணர்வு உரையை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வழங்கினார். மேலும், மாணவர்கள் தங்கள் கல்வியை புதுமையாகவும் பொறுப்புடன் சமநிலைப்படுத்தி முன்னேற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.



