கன்னியாகுமரி, ஜன. 27 –
அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்.பியிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 19.50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டிட பணி முடிவடைந்ததை முன்னிட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், வட்டார தலைவர்கள் டேனியல், சாம் சுரேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



