புதுக்கடை, ஜன. 12 –
புதுக்கடை அருகே உள்ள முக்காடு, ஆலுவிளைப் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் மகன் அபின் (22). பிளம்பிங் வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மனைவி ரோஸ் (54) மற்றும் இவர்களது மகன் மகேஷ் (24) ஆகிய இருவரும் சேர்ந்து அபினிடம் அர்மீனியா நாட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளனர். பின்னர் இதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுவிட்டு, அவரை டூர் விசாவில் அர்மீனியா நாட்டிற்கு அனுப்பி வைத்து ஏமாற்றியுள்ளனர்.
அதன் பின் அபின் ஊருக்கு வந்து மகேஷ் வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவரை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதையடுத்து அபின் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் குற்றம் சாட்டப்பட்ட தாய், மகன் ஆகிய இருவர் மீதும் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


