இரணியல், ஜன. 3 –
இரணியல் அருகே உள்ள திருவிடைக்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் கோலப்பாப்பிள்ளை. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சரஸ்வதி (70). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். சரஸ்வதி தனியாக வசித்து வந்த நிலையில் அருகே வசித்து வந்த அவரது மகன் அஜித்குமார் குடும்பத்தினர் தினசரி உணவு வழங்கி வந்தனர்.
கடந்த ஐந்து மாதங்கள் முன்பு தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. அதில் இருந்து ஏதோ மனவேதனை அடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இன்று மதியம் உணவு வழங்க மகன் அஜித்குமார் சென்ற போது கதவு உள்பக்கம் ஆக பூட்டி இருந்தது. அவரிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் திறந்து பார்த்த போது நைலான் கயிறு கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


