குளச்சல், ஜன. 2 –
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம், அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் ஜேசு தங்கம் (69). மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவ தினம் ஜேசு தங்கம் மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, மனவளக்குறிச்சி பாலத்திலிருந்து கடியப்பட்டினத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று இறங்கி உள்ளார்.
பின்னர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது கடியப்பட்டணம் அந்தோனியார் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் ஜேசு தங்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெறும் ஜேசுதங்கம் சம்பவம் குறித்து மனவளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை விஜயன் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


