ஈரோடு, ஜன. 1 –
அசோசியேசன் ஆஃப் ஆல் டெக்ஸ்டைல் ப்ராசசர்சின் பொதுக்குழு கூட்டம் ஈரோடில் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் வீரக்குமார், கௌரத் தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் முருகானந்தம், இணைச் செயலாளர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, கழிவு நீர் சுத்திகரிப்பு செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் விறகு, டைஸ் அன்ட் கெமிக்கல்ஸ் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகிய தவிர்க்க முடியாத காரணங்களை கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறையில் உள்ள கூலியிலிருந்து சுமார் 20 சதவிகிதம் கூலியை உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட, ஈரோடு, பவானி, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த அனைத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



