திருப்பூர், டிச. 16 –
திருப்பூர் அருகே தெக்கலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 10 மாணவ மாணவிகள்
60 அடி உயரம், 40 அடி உயரம் கொண்ட கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் தனுராசனம், வஜ்ராசனம் உட்பட பல்வேறு யோகாசனம் செய்து உலக சாதனை.
உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி உலக சாதனை யூனியன் அமைப்பு பாராட்டு. பெற்றோர், பள்ளி மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் கைதட்டி பாராட்டு.
திருப்பூர் அருகே தெக்கலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட யோகாசனம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வு யோகா மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்லும் அமைந்துள்ளது.
இதில் சிறுவர் சிறுமிகள் மாணவ மாணவிகள் 10 பேர்கள், 60 அடி உயரம் மற்றும் 40 அடி உயரம் கொண்ட கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் தனுராசனம் , வஜ்ராசனம், சக்ராசனம், பூர்ணசலபாசனம், சமத்வாசனம், கண்ட பேருடாசனம் உட்பட பல்வேறு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர். உலக சாதனை நிகழ்வு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வானது அதிக உயரத்தில் மற்றும் சிறப்பு சூழ்நிலைகளில் நீண்ட நேரம் யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, அதிக உயரத்தில் விபக்த பாத சிவலிங்ககராசனம் செய்து எஸ்.எஸ். மோஹித் உலக சாதனை படைத்தார். எஸ். செல்வ தர்ஷினி தனுராசனம் செய்தும், எஸ். செல்வ தர்ஷன் சக்ராசனம் செய்தும், எஸ்.என். ஸ்ரீ சம்யுக்தா கண்டபேருடாசனம் செய்தும், டி. பிரிதிகா
திரியங்க முகோத்தானாசனம் செய்தும் உலகளவில் பதிவு செய்து உலக சாதனை படைத்தனர்.
மேலும், கண்ணாடி பெட்டிக்குள் லகு வஜ்ராசனம் செய்து வி.கே. அக்ஷித், கண்ணாடி பெட்டிக்குள் பூர்ண சலபாசனம் செய்து ஆர். சாத்விக் உலக சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல், அதிக உயரத்தில் ஏரியல் தனுராசனம் செய்து எஸ். ஜெயஆகாஷ், சமத்வாசனம் செய்து ஆர். ஹரிஷ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதற்கிடையில், ரோலா போலா உடற்பயிற்சி கலை நிகழ்ச்சியை நீண்ட நேரம் செய்து சி. சம்பத் உலக சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து உலக சாதனை படைத்த 10 சிறுவர் சிறுமியர் மாணவ, மாணவிகளுக்கு உலக சாதனை யூனியன் அமைப்பு சார்பில் பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



