By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்
மாவட்டம்

காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்

Last updated: November 30, 2024 10:21 am
November 30, 2024
53 Views
Share
SHARE

நீலகிரி. நவ.30.

 குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தாவரவியல் துறை   ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து காலநிலை மாற்றம் குறித்து கருத்தரங்கு மற்றும் இயற்கை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஷீலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது கூறிய கருத்துக்களாவன –

 உலக அளவிலான காலநிலை மாற்றம் கருத்தரங்கு அண்மையில் அசர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் நடந்து முடிந்தது. இந்த 29 ஆவது கோப் மகாநாடு மீண்டும் ஒரு பயனற்ற  மாநாடாக நடந்து முடிந்தது.  காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தக்கூடிய எந்தவிதமான  முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. உலக அளவில் அதிக அளவு கார்பன்களை வெளிப்படுத்தும் வளர்ந்த நாடுகள் கார்பன் வெளியீட்டுக்கு   விலையாக    வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகை கொடுக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஏராளமான சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் வளர்ந்த நாடுகள் ‘கார்பன் நிதி’யாக நூறு ட்ரில்லியன் டாலர்கள் நிதி வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. இந்த நிதியை வைத்துக்கொண்டு ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நாடுகளில் கால நிலை மாற்றத்த தடுத்து நிறுத்தும் வகையில்  காடுகளை உண்டாக்குதல் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் அதற்குண்டான தொழில்நுட்பங்களை வழங்குதல் போன்ற  நிகழ்வுகளுக்காக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளோ 10 பில்லியன் டாலர்கள் மட்டுமே வழங்க முடியும் என அறிவித்துள்ளன. அதாவது இந்தத் தொகை  100 ரூபாய் கேட்டால் 10 பைசா தருவதற்கு இணையானது. ஆக மொத்தம் இந்த 29ஆவது  உலக  சுற்றுச்சூழல் மகாநாடு  மீண்டும் ஒரு தோல்வியை தழுவியது என்றே கூறலாம். பணக்கார நாடுகள் தங்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ள எவ்விதமான ஆர்வமும் காட்டவில்லை. பல தீவு நாடுகள் உங்கள் ஆடம்பரத்திற்காக நாங்கள் சாக வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. கடந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பஞ்சாமிர்தம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்தத் திட்டத்தின் படி  உலக அளவில் அதிக கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுத்தும் மூன்றாவது நாடான  இந்தியா 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற நிலையை எட்டி விடும் என உறுதி அளித்தார். ஆனால் இந்திய அரசு இதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நவீன அறிவியல் காலநிலை மாற்றத்தை மீட்டெடுக்கும் வகையில்  புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி  கார்பன் டை ஆக்சைடை வெளிப்படுத்தும் இடத்திலேயே தேக்கி வைப்பது, அந்த கார்பன் டை ஆக்சைடை  ஆக்கபூர்வமாக உற்பத்தி செயல்களுக்கு பயன்படுத்துதல், கார்பன் டை ஆக்சைடு வாயுவை கார்பன் ஆகவும்  ஆக்சிஜனாகவும்  பிரித்தல் போன்ற பல புதிய திட்டங்களை அறிவித்துள்ள போதிலும் அதற்கான நிதி கிடைக்காத வரையில் எதுவும் நடைபெறப் போவதில்லை. இந்த கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தி வைரங்களையும் உற்பத்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இனி இந்த பூமியை காக்க என்ன வழி என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்.  காலநிலை மாற்றம் என்ற கருத்தை ஜெர்மனியில் நடைபெற்றது  போல அரசியல் விழிப்புணர்வாக மாற வேண்டும். ஜெர்மனியில் சுற்றுச்சூழல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதுபோல உலகெங்கிலும் சுற்றுச்சூழல் கட்சிகள் ஆட்சி செய்தால்தான் இந்த பூமிக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரேட்டா துன்பர்க் என்ற மாணவி உலகத் தலைவர்களை நோக்கி பூமி அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் என்ன பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டு உலக அளவில் பிரபலமானவர். அவருடைய கேள்விக்கு இந்த மனித சமுதாயம் எப்பொழுது பதிலளிக்கும் என்பதுதான் நம் அனைவரின் முன் உள்ள கேள்வி. என்பதைப் போன்ற பல செய்திகளை கூறினார். இந்த நிகழ்வினை ஒட்டி  கல்லூரி வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான செயல்பாடுகள் துவக்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பழ மரங்களை நட்டனர்.  முன்னதாக தாவரவியல் துறை தலைவர் முனைவர் ரோஸ்பி லீமா  அனைவரையும் வரவேற்றார். கல்லூரி அலுவலர்கள் குமார், ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா திரும்ப பெற
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விட்டால் கடும் நடவடிக்கை
12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம்.

May 12, 2024
135 Views
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-வது நினைவு தினம் அனுசரிப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account