களியக்காவிளை, பிப். 16 –
களியக்காவிளை அருகே அதங்கோட்டில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக விழா உள்ளிட்ட விழாக்கள் நடந்தது.
விழாவில் காலை தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விழாவில் பள்ளி எஸ்.எம். சி குழு தலைவி விமலாகுமாரி தலைமை வகித்தார். பள்ளி மாணவி அன்ஷிகா ஏஞ்சல் வரவேற்றார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி சிந்து முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை குமாரி சுனீதி ஆண்டறிக்கை வாசித்தார்.
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 12 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிட அடிக்கல் நாட்டி பேசினார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாணவர் சங்க தலைவர் ராஜன், துணைத்தலைவர் சிவானந்தன், செயலாளர் ராஜேஷ் குமார், துணைச் செயலாளர் சிவகுமார், பொருளாளர் ஐயப்பன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். கலந்து கொண்டனர். மாணவி விஜி நன்றி கூறினார். மாணவர்கள் நிவதர்ஷிதா, ஆதிஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.



