By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும்; பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை

Last updated: December 12, 2025 7:08 pm
December 12, 2025
32 Views
Share
SHARE

இரணியல், டிச. 12 –

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‎திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாகர்கோவில் – தோட்டியோடு – திங்கள்நகர் – புதுக்கடை மாநில நெடுஞ்சாலை நுள்ளிவிளை என்னும் இடத்தில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை அதே இடத்தில் அகலமாக விரிவாக்கி புதிய மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகியவை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

‎அதன் அடிப்படையில் புதிய ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தொடங்க இருந்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் கடந்த 10 ஆம் தேதி நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி திங்கள்நகர் – தோட்டியோடு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

‎இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மிகுந்த அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் திங்கள்நகரில் இன்று நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் வே. ராஜசேகர் தலைமை வகித்தார். திமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் வி.ஜோசப்ராஜ், இரணியல் பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஜனதா தள தலைவர் வக்கீல் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‎திங்கள்நகர் வர்த்தகர் நலச் சங்க செயலாளர் செல்வராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணன்குட்டி, தமிழக வெற்றிக் கழகம் காலிங்பிரபு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரூபன் பொன்னுமணி, கரிகரன், சந்திரகுமார், நுள்ளிவிளை ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜன், நுள்ளிவிளை ஜெ. ஜோசப்ராஜ், சுரேஷ் உட்பட கலந்து கொண்டனர்.

‎திட்டமிட்டபடி கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல் அடிக்கடி முந்தின நாளில் நிறுத்தி வைப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வீண் பண விரயம் ஏற்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாகிறது. தற்போதைய நுள்ளிவிளை மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்காத வகையில், மக்களின் வரிப்பணம் ரூ. 100 கோடிக்கு மேல் வீணாகுவதை தடுக்கும் வகையில் தற்போதைய மேம்பாலம் இருக்கும் இடத்தில் அதை அகற்றிவிட்டு அகலமான விரிவான ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்கிற பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி தரும் வகையில் மாவட்ட நிர்வாகமும் ரயில்வே நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்.

‎நுள்ளிவிளை ரயில்வே மேம்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை உடனே ஆரம்பிக்க வேண்டும். இலகுரக வாகனங்கள், பைக்குகள், ஆட்டோக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் பேயன்குழி, வடக்கு நுள்ளிவிளை 4 வழிச்சாலை, குதிரைப்பந்திவிளை, வில்லுக்குறி செல்லும் இரட்டைக்கரை சானல் கரை சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே திட்டமிட்டபடி திங்கள்நகர் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம். மக்களின் நலம் சார்ந்த பிரச்சினைகளில் வீண் ஆதாயம் தேடும் தவறான‌‌ நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழக்கறிஞர் புஷ்பாகரன் நன்றி கூறினார்.

‎முன்னதாக நுள்ளிவிளை சாலையை பயன்படுத்துவோர் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் நடந்திருந்தது. அப்போது பழைய ரயில்வே பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும். மாற்றுப் பாலம் அமைக்க வேண்டும். புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதிலும் பலர் கலந்து கொண்டனர்.

‎இது குறித்து மாவட்ட ஜனதா தள தலைவர் வழக்கறிஞர் அருள்ராஜ் கூறும் போது; அரசு திட்டமிட்டபடி பழைய பாலத்தை உடைத்து அதே இடத்தில் புதிய பாலத்தை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அல்லாத பட்சத்தில் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவோம். இது சம்பந்தமாக நாளை (இன்று) மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தீபாவளி தொடர் விடுமுறை
திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சியில் காந்திஜெயந்தி விழா!!!!!

October 4, 2024
85 Views
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர்சிலைகள்
பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
சுவாச மண்டல நோய்களுக்கான ஊட்டச்சத்து அறிமுகம்
36 பயனாளிகளுக்கு ரூ.68.35 இலட்சம் கடனுதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account