களியக்காவிளை, செப். 27 –
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மேல்புறம் ஒன்றிய பா.ஜ.க சார்பில் மடத்தி குளம் பாசிகள் அகற்றி சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதில் மடத்தி குளம் உள்ளது. இந்த குளம் விளவங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்டது ஆகும். இந்த குளம் சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் அப்போதைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாய்கள், ஊர் மக்கள் ஒன்றிணைந்து குளம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் குளம் தூர் வாரி சுத்தம் செய்து வந்தனர். ஆகவே அப்பகுதி மக்களுக்கு மடத்தி குளம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது கடந்த சுமார் 25-வருடங்களாக மடத்தி குளம் தூர்வாரப்படவில்லை. ஆகவே குளத்தில் பாசிகள் படர்ந்து பயன்பாடற்ற நிலையில் காட்சியளித்தது.
இந்நிலையில் மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பா.ஜ.க வினர் குளத்தின் பாசிகள் அகற்றி சுத்தம் செய்தனர். நேற்று குளம் சுத்தம் செய்யும் பணி நிறைவடைந்தது.
இந்த பொது சேவையில் பா.ஜ.க குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன், ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் சதீஷ் மற்றும் சஜின், றசல்ராஜ், மனோன்மணி, சுரேஷ், மணிகண்டன், அஜித், சுபின், விஜின், சுஜின் உள்ளிட்டோர் மடத்தி குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி சுத்தம் செய்தனர். பொது சேவை செய்த பா.ஜ.க வினரை அப்பகுதியினர் பாராட்டினர்.



