பூதப்பாண்டி, டிச. 10 –
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திட்டுவிளையில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாளையோட்டி காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடினர்.
அந்த வகையில் குமரி மாவட்டம் திட்டுவிளையில் உள்ள காமராஜர் நிழற்குடை அருகில் வைத்து இந்திய தேசிய காங்கிரஸ், தோவாளை வட்டார காங்கிரஸ் கமிட்டி மேற்கு சார்பாக பூதப்பாண்டி பேரூர் கமிட்டியும், வட்டார காங்கிரஸ் கமிட்டியின் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்விற்கு நாஞ்சில் எம். செல்வராஜ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே டி உதயம், அமைப்பு பொதுச்செயலாளர் சாமுவேல் சேகர், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இயேசு ராஜா (பூதப்பாண்டி பேரூர் தலைவர்) ஜெயசீலன் (வட்டார செயல் தலைவர்) ஆகியோருக்கு முன்னிலை வகித்தனர்.
முகமது ராபி, கோல்டா மேயர், அசன், கலீல் ரகுமான், மாகின், மரிய ஜான்சன், சாம் சுந்தர், அபிராமி, திவ்யா, சரோஜா, கிறிஸ்து தாஸ், ராமதாஸ், நாஸ்லின் சுந்தர், ஏசுதாஸ், சுரேஷ், வைகுண்ட மணி, அமல்ராஜ், ஆல்பர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.



