தூத்துக்குடி, டிசம்பர் 06 –
தூத்துக்குடியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு காவல் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



